நடுநிலை தவறிய வேட்கை நல்லதல்ல. பேரின்ப வீட்டுக்கு அது தடை. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும், அடுத்தவரின் பொருள் மீது ஆர்வம் கொள்ளுதல் கூடாது. வேட்கையை விட்டொழித்துவிட்டேன் என்ற செருக்கு இன்பம் தரும். 1. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும். நடுநிலை தவறி, நல்ல பொருள் என்று ஒரு பொருள் மீது வேட்கை கொண்டால், குடும்ப ஒழுக்கம் கெட்டு குற்ற உணர்வும் தந்துவிடும். 2. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவுஅன்மை நாணு […]
