திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 14 ஓழுக்கமுடைமை

வாழ்தலுக்கான வரைமுறையே ஒழுக்கம். அது வீடுபேறு அடைய உதவும் என்பதால், உயிரைவி மேலானதாகப் போற்ற வேண்டும். ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம். நல்லொழுக்கம் என்பதே நன்றியுணர்வுடன் இருப்பது. அதிலும், உலகத்துடன் ஒத்திசையும்படி நடப்பவரே கற்றறிந்தவர். 1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 3.ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். 4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 8 அன்புடைமை

ஒருவர் அன்பானவராக இருந்தால், அவரால் இரக்கத்தை மறைக்க முடியாது. கண்களில் கண்ணிர் வழியும். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் தன் உயிரையும் அடுத்தவற்குத் தரவல்லவராகவும், அடுத்தவருடன் ஒத்திசைவுடனும், ஆர்வமுடனும் இருப்பார்கள். இன்பமுடனும், அறம் காக்கும் பண்புடனும், உண்மையான உயிர் வாழ்தல் என்ற சிறப்புடனும் இருப்பார்கள். 1) அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். 2) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 3) அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 6 வாழ்க்கைத் துணை நலம்

வாழ்தலே எல்லாவற்றிலும் சிறந்தது. அதற்குத் துணையாக இருக்கும் எதிர்பாலினம் சிறப்பாக அமைந்துவிட்டால் வளம் பல கிடைத்துவிடும். ஆனால், நிர்வாகத் திறன் இல்லாதவர் என்றால் ஏற்றம் இருக்காது. வேண்டியபொழுது வரும் மழையைப் போன்றவள் மனைவி. மேலும், தன்னையும் காத்து, தன்னைச் சார்ந்தவரையும் காப்பவளும் அவளே. எனவே, பெற வேண்டியது நல்ல துணையே. அதுவே மங்களம். 1) மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.2) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித்து ஆயினும் இல்.3) இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்இல்லவள் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 5 இல்வாழ்க்கை

உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பொருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு பூண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தோம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல்வாழ்வின் சிறப்புக்கூறுகள். எனவே, அன்புடனும், அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். எதில் இருந்து கற்பதன் மூலமும், இல்வாழ்வில் இருந்துதான் அதிகமாகக் கற்க முடியும். அறவாழ்வை விடவும் இல்வாழ்வு மேலானது. பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம். 1) இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 4 அறன் வலியுறுத்தல்

மனதால் நேர்மையுடன் இருப்பதே அறம். அப்படி அறமுடன் இருப்பவர்க்கு செல்வமும், சிறப்பும் வளரும். அறத்தை மறுப்பவர் வாழ்வில் வீழ்ச்சி உறுதி. அழிக்கும் குணம், அளவற்ற ஆசை, கடும் கோபம், வன் சொல் இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம். அடுத்தவர் மதிக்கப்பட வேண்டும் என்று அறத்தை செய்யாமல், தனக்காகச் செய்ய வேண்டும். அடிமையாக இருப்பது அறமாகாது. அறமே இன்பத்தைத் தரும். 1) சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு 2) அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை […]